About

தமிழ்நாட்டில் உள்ள பெருநகராட்சி மிக பெரிய பரப்பளவு கொண்ட நகராட்சிகளில் ஆவடியும் ஒன்றாகும். சென்னை மாநகராட்சிக்கு மேற்கு எல்லையான அம்பத்தூரினை ஒட்டி அமைந்துள்ளது. தன் பரப்பளவு 65 சதுர கி.மீ ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடப்பின் படி இதன் மக்கள் தொகை 3,44,701 ஆகும்.

ஆவடி நகரியமாக செயல்பட்ட வந்த நிலையில் அரசாணை எண். 511 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள் 30.6.1071 ன் படி 01.7.1971 முதல் பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், சேக்காடு, தண்டுரை, கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி மற்றும் திருமுல்லைவாயல் ஆகிய ஒன்பது (9) வருவாய் கிராமங்களை உள்ளடக்கி இரண்டாம் நிலை நகரியமாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அரசாணை எண்.29 (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறை) நாள் 31.1.1994 ன் படி தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அரசாணை நிலை எண்.238 ( நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறை) நாள் 02.12.2008-ன் படி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அரசாணை எண்.117 நாள் 17.6.2019-ன் படி மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.